×

சத்தியமங்கலம் பண்ணாரி அருகே கடும் வறட்சியால் தண்ணீர் தேடி அலையும் காட்டு யானைகள்

சத்தியமங்கலம்: பண்ணாரி அருகே கடும் வறட்சியால் தண்ணீர் தேடி சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் காட்டு யானைகள் நடமாடிய காட்சி வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் காணப்படுகின்றன. வனப்பகுதியில் உள்ள மரம் செடி கொடிகள் கடும் வறட்சியால் காய்ந்து கருகிவிட்டன. மேலும், வனப்பகுதியில் உள்ள பள்ளங்கள், நீரோடைகள் மற்றும் தடுப்பணைகளில் தண்ணீர் வற்றியது. இதன் காரணமாக, காட்டு யானைகள் தீவனம் மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது.

நேற்று சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அருகே காட்டு யானைகள் குட்டிகளுடன் தண்ணீர் தேடி தேசிய நெடுஞ்சாலை ஓரம் முகாமிட்டன. வனப்பகுதி சாலையை காட்டு யானைகள் அடிக்கடி கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் வனப்பகுதி சாலையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகளின் தாகம் தீர்க்க வனத்துறையினர் வனப்பகுதியில் ஆங்காங்கே செயற்கை தொட்டிகள் வைத்து தண்ணீர் நிரப்ப வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சத்தியமங்கலம் பண்ணாரி அருகே கடும் வறட்சியால் தண்ணீர் தேடி அலையும் காட்டு யானைகள் appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam Pannari ,Sathyamangalam ,Pannari ,Sathyamangalam-Mysore National Highway ,Erode district ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்...